முகவரி

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,
துகார் டவர்ஸ் ,
34 (123) , 6வது தளம் ,
மார்ஷல்ஸ் சாலை ,
எழும்பூர் ,
சென்னை - 600 008.
தொ. பேசி: +91-44-2843 2911 தொ. நகல்: +91-44-2843 2913 மின்னஞ்சல்: tactv@tactv.in இணைய விசாரணைகள்: tacnet@tactv.in
தொ. பேசி : (044) 2843 2911 மின்னஞ்சல்: tactv@tactv.in இணைய விசாரணைகள்: tacnet@tactv.in    
Due to server maintenance, TACTV website will not be available from 8PM 17Dec2016 to 9AM 19Dec2016

எங்களைப் பற்றி

அரசு கேபிள் டிவி நிறுவனம் என்ற தமிழக அரசு நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் 04.010.2007 அன்று துவங்கப்பட்டு இதற்கென தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடி செலவில் டிஜிட்டல் தலைமுனைகள் அமைக்கப்பட்டன. குறைந்த விலையில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும்.

பல்வேறு காரணங்களினால் செயலிழந்த நிலையில் இருந்த அரசு கேபிள் டிவி நிறுவனம் இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் புனரமைக்கப்பட்டு புத்துயிரூட்டப்பட்டது. இதற்காக இந்நிறுவனத்திற்கு ரூ.3 கோடி நிதியுதவி கடனாக வழங்கப்பட்டது. மேலும் இந்நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டது

தமிழகத்தின் 27 மாவட்ட தலைநகரங்களில் விருப்பமுள்ள தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குத்தகைக்கு எடுத்ததுடன், ஏற்கனவே 4 மாவட்டங்களில் இருந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறைகளை புனரமைத்தது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 30.8.2011 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் ரூ.70/- என்ற கட்டணத்தில் தரமான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் வழங்கும் எனவும், இதில் ரூ.20/-ஐ மட்டும் கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்துவார்கள் எனவும் அறிவிப்பு வெளியிட்டார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 2.9.2011 அன்று வேலூரில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைமுனையினை காணொலி காட்சி வாயிலாக இயக்கி வைத்து இந்நிறுவனத்தின் கேபிள் டிவி சேவையினை சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவக்கி வைத்தார்கள். 20.10.2012 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகரப் பகுதிகளுக்கான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையினை துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் பொது மக்களுக்கு ரூ.70/- என்ற மிக குறைந்த கட்டணத்தில் 90-100 சேனல்களுடன் தரமான கேபிள் டிவி சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் மிக அதிக அளவிலான கேபிள் ஆப்பரேட்டர்களும், பொதுமக்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி சேவையினை பெற்று வருகின்றனர்.

02.09.2011ல் இந்நிறுவனம் தனது சேவையை தொடங்கியபோது இந்நிறுவனத்தின் சந்தாதாதரர்களின் எண்ணிக்கை 4.94 இலட்சங்கள் என இருந்தது. இந்த எண்ணிக்கை 31.03.2013 அன்றைய நிலவரப்படி 61,54,531 என உயர்ந்துள்ளதிலிருந்து இந்நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சியை அறியலாம். மேலும் இந்நிறுவனத்தின் இணைப்பு பெற்றுள்ள ஆப்பரேட்டர்களின் எண்ணிக்கை 24,300 என உயர்ந்துள்ளது. இந் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை ஒரு கோடி என உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 137 கட்டணச் சேனல்களின் சிக்னல்களை வாங்கியுள்ளது. இந்நிறுவனம் தற்போது ஏறத்தாழ அனைத்து கட்டணச் சேனல்களையும் பெற்றுள்ளது. இந் நிறுவனம் தற்பொழுது இலவச சேனல்கள், கட்டணச் சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்களுடன் சேர்த்து மொத்தம் 90 முதல் 100 சேனல்களை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது சேவையினை தொடங்குவதற்கு முன்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தியதுடன், கேபிள் ஆப்பரேட்டர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அதிக அளவு கட்டணங்களை, அப்போது பொதுமக்கள் கேபிள் டிவி சேவையைப் பெற மாதம் ஒன்றிற்கு ரூ.150/- முதல் ரூ.250/- வரை கேபிள் டிவி சேவைக்கான மாத சந்தா தொகையாக செலுத்தி வந்தனர்.

தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தினால் அளிக்கப்பட்டு வரும் கேபிள் டிவி சேவை, கேபிள் ஆப்பரேட்டர்கள் மற்றும் பொது மக்களின் நலநன கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட நலத்திட்டமாகும். தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பெருமளவிளான கட்டணச் சேனல்களுடன் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவையை அளித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மாதந்தோறும் ரூ.80 முதல் ரூ.180 வரை சேமிப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் கேபிள் டிவி சேவை பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இதுவரை 1200 உள்ளூர் சேனல்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கியுள்ளது. அவற்றுள் சுமார் 800 உள்ளூர் சேனல்கள் இந்நிறுவனம் வாயிலாக தங்களுடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

சென்னை மாநகர சேவை துவக்கம்

20.10.2012 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி சேவையை சென்னை மாநகரப் பகுதிகளில் துவக்கி வைத்தார்கள். இந்நிறுவனம், சென்னை மாநகரப் பகுதிகளில் அனலாக் சிக்னல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு அளித்து வருகிறது. மேலும், டிஜிட்டல் முறையிலான சிக்னல்களை வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், 100 தரமான தெளிவான சேனல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் வாயிலாக மாதம் ரூ.70 என்னும் குறைந்த கட்டணத்தில் சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சந்தாதாரர்களுக்கு அளித்து வருகிறது.

டிஜிட்டல் மயமாக்கம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சென்னை மாநகரத்தின் கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பு (Conditional Access System – CAS) பகுதி மக்களுக்கு பன்முனை அமைப்பு ஆப்பரேட்டர் (Multi System Operator - MSO) உரிமம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம் 2011-ன்படி நாடு முழுவதும் 31.12.2014க்குள் கேபிள் டிவி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இதில் முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களை டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான, (Digital Access System - DAS) பகுதிகளுக்கான பன்முனை அமைப்பு ஆப்பரேட்டர் (MSO) உரிமம் வழங்கக் கோரி 05.07.2012 அன்று மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்து, அவ்விண்ணப்பம் நிலுவையில் உள்ளது.

சென்னை மாநகரப் பகுதியை டிஜிட்டல் மயமாக்க நிறுவனம் எடுத்துவரும் நடவடிக்கைகள்

சென்னை மாநகரப்பகுதியில் டிஜிட்டல் சிக்னல் வழங்கி டிஜிட்டல் மயமாக்கிட, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிறுவனம் ரூ.20.72 கோடியை டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையை மேம்படுத்தவும் கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பு (Conditional Access System – CAS) சந்ததாரர் மேலாண்மை அமைப்பு (Subscriber Management System - SMS) மற்றும் செட்-டாப் பாக்ஸ்கள் வாங்கவும், தகவல் மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொடர்பான இதர உபகரணங்கள் வாங்கவும் முதலீடு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைய விருப்பம் தெரிவித்து சென்னை மாநகர பகுதியில் உள்ள 14,66,336 சந்தாதாரர்களைக் கொண்ட 2577 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இந் நிறுவனத்தில் பதிவு செய்து உள்ளனர். 1223 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்கள் கேட்டு பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் ஆக்ஸஸ் சிஸ்டம் (Digital Access System - DAS) உரிமம் கிடைக்கப் பெற்றதும், சென்னை மாநகரப் பகுதிகளில் டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி சேவையை அளிக்க உள்ளது.

செய்திகள்

  • 11 Jan
    Tender Cum Auction for sale of Used Office Car Mitubishi Cedia Sports Sedan - Last Date: 28.01.2016.
    Tender Cum Auction for sale of Used Office Car Mitubishi Cedia Sports Sedan. Jan 11, 2016 | Read More
  • 26 Oct
    Tender for selection of Telecom Service Providers for provision of Internet Bandwidth on Lease - Last Date: 21.12.2015.
    Tender for selection of Telecom Service provider for provision of Internet Bandwidth and Point to Point Lease line circuit for launch of Internet services. November 25, 2015 | Read More
  • 16 Feb
    Tamil Nadu Arasu Cable TV Corporation Ltd (TACTV) invites sealed tenders from reputed and well experienced Consultancy Agencie
    Preparation of business plan and providing support services for its foray in to Internet Services and other Value Added Services (VAS) in Tamil Nadu. February 16, 2015 | Read More
  • 11 Feb
    TENDER FOR RADIO FREQUENCY AND OPTICAL POWER METERS
    TENDER FOR THE SUPPLY OF 31 NUMBERS OF RADIO FREQUENCY AND OPTICAL POWER METERS February 11, 2015 | Read More
  • 09 பிப்
    TENDER FOR FIXATION OF CARRIAGE FEE
    TENDER FOR FIXATION OF CARRIAGE FEE FOR THE ALLOTMENT OF 23 SLOTS TO SATELLITE FREE-TO-AIR TAMIL CHANNELS பிப்ரவரி 09, 2015 | Read More
  • 30 ஜன
    ALLOTMENT OF PRIVATE LOCAL CHANNELS
    ALLOTMENT OF PLC IN THE VACANT PLACES OF CABLE TV SERVICE ஜனவரி 30, 2015 | Read More
  • 28 நவ
    மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கி பொருத்துவதற்கான ஒப்பந்தபுள்ளி
    மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கி பொருத்துவதற்கான விலைப்புள்ளிகளை கோரும் ஒப்பந்தபுள்ளி நவம்பர் 28, 2014 | Read More
  • 15 நவ
    மனிதவள நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தபுள்ளி
    பல்வேறு பணிகளுக்காக பணியாளர்களை வழங்கும் மனிதவள நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தபுள்ளி நவம்பர் 15, 2014 | Read More
  • 30 செப்
    ஒப்பந்தப்புள்ளி (Tender)
    GAS BASED தீயணைப்புக் கருவிக்கான ஒப்பந்தப்புள்ளி செப்டம்பர் 30, 2014 | Read More
  • 30 ஜூலை
    விருப்புரிமை (EOI)
    தனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI) ஜூலை 30, 2014 | Read More
  • 26 ஜூன்
    ஒப்பந்தப்புள்ளி
    FM -200 தீயணைப்புக் கருவிக்கான ஒப்பந்தப்புள்ளி ஜூன் 26, 2014 | [PDF] [More]
  • 01 ஜூன்
    ரசீது
    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ரசீது ஜூன் 01, 2014 | [PDF]
  • 01 ஜூன்
    LCO & PLC
    LCO & PLC மாதக்கட்டணத்தினை பிரதிமாதம் 20-ம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜூன் 01, 2014 | [PDF]
  • 07 மார்
    வாக்காளர்
    வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? மார்ச் 07, 2014 | [PDF][DOC]
  • 28 பிப்
    விருப்புரிமை (EOI)
    தனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI) பிப்ரவரி 28, 2014 | Read More
  • 23 பிப்
    விருப்புரிமை (EOI)
    கோயம்பத்தூர் மாநகராட்சியில் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI) பிப்ரவரி 23, 2014 | Read More
  • 17 பிப்
    விருப்புரிமை (EOI)
    மதுரை மாநகராட்சியில் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI) பிப்ரவரி 17, 2014 | Read More
  • 13 ஜன
    டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வசதி
    14.01.2014 முதல் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வசதி ஜனவரி 13, 2014 | Read More
  • 10 ஜன
    விருப்புரிமை (EOI)/ ஒப்பந்தப்புள்ளி (Tender)
    தனியார் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த விருப்புரிமை (EOI)/ ஒப்பந்தப்புள்ளி (Tender) ஜனவரி 10, 2014 | Read More
  • 29 நவ
    LCO உரிமம்
    LCO உரிமம் வழங்கும் நடைமுறைகள் தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளன நவ 29, 2013 | Read More