முகவரி

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,
807, 4வது தளம்
பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் மாளிகை,
LIC எதிரில்,
அண்ணா சாலை,
சென்னை – 600 002
தொ. பேசி: +91-44-2843 2911 தொ. நகல்: +91-44-2843 2913 மின்னஞ்சல்: tactv@tactv.in இணைய விசாரணைகள்: tacnet@tactv.in
மின்னஞ்சல்: tactv@tactv.in இணைய விசாரணைகள்: tacnet@tactv.in    

எங்களைப் பற்றி

அரசு கேபிள் டிவி நிறுவனம் என்ற தமிழக அரசு நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் 04.010.2007 அன்று துவங்கப்பட்டு இதற்கென தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடி செலவில் டிஜிட்டல் தலைமுனைகள் அமைக்கப்பட்டன. குறைந்த விலையில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் பொது மக்களுக்கு ரூ.70/- என்ற மிக குறைந்த கட்டணத்தில் 90-100 சேனல்களுடன் தரமான கேபிள் டிவி சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் மிக அதிக அளவிலான கேபிள் ஆப்பரேட்டர்களும், பொதுமக்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி சேவையினை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 137 கட்டணச் சேனல்களின் சிக்னல்களை வாங்கியுள்ளது. இந்நிறுவனம் தற்போது ஏறத்தாழ அனைத்து கட்டணச் சேனல்களையும் பெற்றுள்ளது. இந் நிறுவனம் தற்பொழுது இலவச சேனல்கள், கட்டணச் சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்களுடன் சேர்த்து மொத்தம் 90 முதல் 100 சேனல்களை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தினால் அளிக்கப்பட்டு வரும் கேபிள் டிவி சேவை, கேபிள் ஆப்பரேட்டர்கள் மற்றும் பொது மக்களின் நலநன கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட நலத்திட்டமாகும். தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பெருமளவிளான கட்டணச் சேனல்களுடன் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவையை அளித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மாதந்தோறும் ரூ.80 முதல் ரூ.180 வரை சேமிப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் கேபிள் டிவி சேவை பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இதுவரை 1200 உள்ளூர் சேனல்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கியுள்ளது. அவற்றுள் சுமார் 800 உள்ளூர் சேனல்கள் இந்நிறுவனம் வாயிலாக தங்களுடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

டிஜிட்டல் மயமாக்கம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சென்னை மாநகரத்தின் கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பு (Conditional Access System – CAS) பகுதி மக்களுக்கு பன்முனை அமைப்பு ஆப்பரேட்டர் (Multi System Operator - MSO) உரிமம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம் 2011-ன்படி நாடு முழுவதும் 31.12.2014க்குள் கேபிள் டிவி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இதில் முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களை டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும்.

சென்னை மாநகரப் பகுதியை டிஜிட்டல் மயமாக்க நிறுவனம் எடுத்துவரும் நடவடிக்கைகள்

சென்னை மாநகரப்பகுதியில் டிஜிட்டல் சிக்னல் வழங்கி டிஜிட்டல் மயமாக்கிட, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிறுவனம் ரூ.20.72 கோடியை டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையை மேம்படுத்தவும் கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பு (Conditional Access System – CAS) சந்ததாரர் மேலாண்மை அமைப்பு (Subscriber Management System - SMS) மற்றும் செட்-டாப் பாக்ஸ்கள் வாங்கவும், தகவல் மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொடர்பான இதர உபகரணங்கள் வாங்கவும் முதலீடு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைய விருப்பம் தெரிவித்து சென்னை மாநகர பகுதியில் உள்ள 14,66,336 சந்தாதாரர்களைக் கொண்ட 2577 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இந் நிறுவனத்தில் பதிவு செய்து உள்ளனர். 1223 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்கள் கேட்டு பதிவு செய்துள்ளனர்.

செய்திகள்

 • 21 Jan
  Tender for Supply of High Definition Set Top Boxes and Digital services for TACTV with Conditional Access System (CAS) on Franchisee Model.
  Tender for Supply of High Definition Set Top Boxes and Digital services for TACTV with Conditional Access System (CAS) on Franchisee Model. . Jan 21, 2023 | Read More
 • 05 Jan
  Tender for supply of HD Set Top Box and digital services for TACTV by providing rights of advertising and consequential revenue at landing page of TACTV
  Tender for supply of HD Set Top Box and digital services for TACTV by providing rights of advertising and consequential revenue at landing page of TACTV. Jan 05, 2023 | Read More
 • 04 Nov
  Expression of Interest (EoI) for OTT (Over the Top) Solutions
  Expression of Interest (EoI) for OTT (Over the Top) Solutions. Nov 04, 2022 | Read More
 • 04 Nov
  Tender for licensing of CAS SMS alongwith servers and it's licence fee
  Tender for licensing of CAS SMS alongwith servers and it's licence fee . Nov 04, 2022 | Read More
 • 27 Jul
  Tender for hiring of Diesel Non AC Bolero/Hatchback cars for use of Officers of TACTV in Tamil Nadu for 3 years on rate contract basis
  Tender for hiring of Diesel Non AC Bolero/Hatchback cars for use of Officers of TACTV in Tamil Nadu for 3 years on rate contract basis. Jul 27, 2022 | Read More