бесплатная бонусная ставка
likit elektronik sigara deneme bonusu deneme bonusu veren siteler betpark giriş deneme bonusu veren siteler kolaybet deneme bonusu veren siteler deneme bonusu veren siteler deneme bonusu veren siteler deneme bonusu veren siteler canlı bahis siteleri deneme bonusu veren siteler casino siteleri deneme bonusu veren siteler deneme bonusu veren siteler Deneme bonusu veren siteler Deneme bonusu veren siteler Deneme bonusu veren siteler deneme bonusu veren siteler deneme bonusu veren siteler casino siteleri 1xbet giriş süperbetin giriş süperbetin giriş 1xbet goldlightjewels.com casino süperbetin.net deneme bonusu deneme bonusu veren siteler sweet bonanza www.devyapi-is.org turcep.org casino siteleri Gaziantep Escort Gaziantep Escort beylikdüzü escort beylikdüzü escort beylikdüzü escort türk porno https://www.fapjunk.com mecidiyeköy escort şişli escort istanbul escort gaziantep escort gaziantep escort porno film izle

முகவரி

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,
807, 4வது தளம்
பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் மாளிகை,
LIC எதிரில்,
அண்ணா சாலை,
சென்னை – 600 002
தொ. பேசி: +91-44-2843 2911 தொ. நகல்: +91-44-2843 2913 மின்னஞ்சல்: tactv@tactv.in இணைய விசாரணைகள்: tacnet@tactv.in
மின்னஞ்சல்: tactv@tactv.in இணைய விசாரணைகள்: tacnet@tactv.in    

ஐயமும் விளக்கமும்

1.  "இல்லந்தோறும் இணையம்" திட்டம் எப்பொழுது துவக்கப்பட்டது?

"இல்லந்தோறும் இணையம்" திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 01.03.2016 அன்று துவக்கப்பட்டது.

2.  "இல்லந்தோறும் இணையம்" திட்டம் என்றால் என்ன?

"இல்லந்தோறும் இணையம்" திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம். அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கும் திட்டமாகும்.

3. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் "இல்லந்தோறும் இணையம்" திட்டம் தற்பொழுது எந்தெந்த பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது?

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் "இல்லந்தோறும் இணையம்" திட்டம் தற்பொழுது முதல்கட்டத்தில் மாவட்ட தலைநகரங்களில் செயல்படுத்தப்பட்டு இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது.

4. புதியதாக எந்தெந்த பகுதிகளில் தனது சேவையை விரிவுபடுத்த உத்தேசித்துள்ளது?

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் "இல்லந்தோறும் இணையம்" திட்டம் தற்பொழுது இரண்டாம் கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவுபட உள்ளது.

5.  "இல்லந்தோறும் இணையம்" திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படுமா?

"இல்லந்தோறும் இணையம்" திட்டம் பேரூராட்சி பகுதிகளில் பின்னர் விரிவுபடுத்தப்படும். அதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பம் அப்போது வெளியிடப்படும்.

6. இணைய சேவை தொழிலில் ஈடுபட தேவைப்படும் முதலீடு பற்றி விளக்கவும்?

    200  இணைப்புகள் கொடுப்பதற்கான செலவினத் தொகை:
  • வைப்புத் தொகை (EMD) - ரூ. 25,000.
  • நிறுவல் கட்டணம் (Installation charge) - ரூ. 26,000. (ஒருமுறை).
  • கணினி மற்றும் ஸ்கேனர் - ரூ. 30,000.
  • பைபர் கேபிள் (6 core) - ரூ. 10. (மீட்டர் ஒன்றிற்கு) 
  • திசைவி (Router) - ரூ. 40,000.
  • ஆப்டிக்கல் லிங்க் டெர்மினல் ( 3 PON னுடன்) - ரூ. 75,000.

  • 7. இத்திட்டத்தில் சேர்ந்து தொழில் செய்வதற்கு கடனுதவி வழங்கப்படுமா? ஆம் எனில் எவ்வாறு?

    இத்திட்டத்தில் இனைந்து தொழில் செய்ய விருப்பம் தெரிவித்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்புக் கடிதமும், ஒப்பந்தப் பத்திரமும் வழங்கப்படும். கடனுதவி தேவைப்படுபவர்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு (State Bank of India) சென்று மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்தால் கடனுதவி வழங்குவார்கள். கடனுதவி வழங்குவது தெடர்பாக பாரத ஸ்டேட் வங்கி எடுக்கும் முடிவே இறுதியானது ஆகும்.

    8. பைபர் கேபிளை எவ்வாறு பதிப்பது, பைபர் கேபிள் இணைப்புகளை பராமரிக்க ஆட்கள் தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவத்தின் மூலம் பணியமர்த்தப்படுவார்களா?

    தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பைபர் கேபிளை தரைக்குக்கீழே அல்லது வான் வழியாக அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பைபர் கேபிள் இணைப்புகளை பராமரிக்க சம்மந்தப்பட்ட நபர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

    9. வருவாய் பங்கீடு பற்றி  விளக்குக?

    வருவாய் பங்கீடு குறித்த விளக்கம் விருப்பம் கோரும் விண்ணப்பத்தில் (EOI) உட்பிரிவு 7ல் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10. இணைய சேவை வழங்கும் திட்டத்தில் இணைவதற்கு முன்னனுபவம் மற்றும் தகுதி ஏதேனும்  தேவையா?

    முன்னனுபவம் மற்றும் தகுதிகள் பொதுவாக தேவையில்லை. ஆனால் விண்ணப்பம் கோரும் விண்ணப்பத்தில் (EOI) உட்பிரிவு 2ல் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

    11. அபராதத் தொகை (Penalty Amount) பற்றி விளக்குக

    தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் அலைக்கற்றை வழங்கும் நிறுவனத்திடமிருந்து அலைக்கற்றைகளைப் பெற்று, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்குகிறது. அவ்வாறு அலைகற்றைகளை வழங்கும் நிறுவனத்திற்கு குறைந்த பட்ச கட்டணமாக (Minimum Band width charges) குறிப்பிட்ட தொகையை அரசு கேபிள் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிறுவனத்துடன் இணைந்து இணைய சேவை வழங்கும் தொழில் முனைவோர் இரண்டு மாதத்திற்குள் குறைந்தபட்சம் 100 சந்தாதாரர்களைப் பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையில் இணைய சேவை வழங்க ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. 100 சந்தாதாரர்களுக்கு குறைவாக இருந்தால் குறைந்த பட்ச அலைகற்றை கட்டணத்தை  (Minimum Band width charges) செலுத்துவதில் இந்நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும். மேற்படி நஷ்டத்தை ஈடுகட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும். உதாரணமாக ஒரு விண்ணப்பதாரர் இரண்டு மாதத்திற்குள் 100 சந்தாதாரர்கள் இணைப்புதர இயலாமல் 40 இணைப்புகள் மட்டும் இணைப்பு தந்துள்ளார் என்றால், அவரது அபராதத்தொகை விபரம் பின் வருமாறு :

    • 40 இணைப்புகள்மூலம் சந்தாதாரர்களிடமிருந்து பெறப்படும் தொகை ரூ. 20,000 ( தோராயமாக)
    • மேற்படி தொகையில் TACTV-யின் பங்கு (56%)                  ரூ. 11,200 ( தோராயமாக)
    • அலைக்கற்றைக்கான தொகை (Band width charges) ரூ. 22000 ( தோராயமாக)
    • மேற்படி நபர் செலுத்த வேண்டிய அபராதத்தொகை (2-1) ரூ. 10,800 ( தோராயமாக)

    12. இணைய சேவைத் தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் உதவி செய்யுமா?

    தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் உதவி செய்யும். பைபர் கேபிள் தொடர்புடைய கோளாறுகளை இணைய சேவை தொழிலில் ஈடுபவரே சரி செய்து கொள்ள வேண்டும்.

    13. சந்தாதாரர்களுக்கு கம்பியில்லா இணைய சேவை (Wireless) வழங்க இயலுமா?

    விண்ணப்பதாரர்கள் தங்கள் செலவில் கம்பியில்லா சாதனம் மூலம் சந்தாதாரர்களுக்கு இணைய சேவையை வழங்கலாம்.

    14. விருப்பம் கோரும் விண்ணப்பங்களில் (EOI -ல்) விண்ணப்பங்கள் எதன் அடிப்படையில் தேர்வு        செய்யப்படும்?.

    பொதுவாக விருப்பம் கோரும் விண்ணப்பங்களில் (EOI -ல்) முதலில் விண்ணப்பித்த விண்ணப்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் தொழில் செய்ய உத்தேசித்துள்ள இடத்தின் சாத்திய கூறுகளும் கருத்தில் கொள்ளப்படும்.

    15. சந்தாதாரர்கள் தங்களது மாதச் சந்தாத் தொகையை ஆன்லைனில் தவிர்த்து எவ்வாறு பணம் செலுத்தலாம்?

    சந்தாதாரர்கள் தங்களது மாதச் சந்தாத் தொகையை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அரசு இ-சேவைமையங்களில் செலுத்தலாம்.

    16. சந்தாதாரர்களின் இணையக் கணக்கை (Customer Account) யார் இயக்கி வைப்பார்கள்?

    சந்தாதாரர்களின் இணையக் கணக்கை, தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனத்தின் சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர்கள் இயக்கி வைப்பார்கள்.

    17. விண்ணப்பதாரர்கள் அலைக்கற்றைக்கான தொகையை செலுத்த நேரிடுமா?

    தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இரண்டு மாதத்திற்குள் 100 இணைப்புகள் என்ற இலக்கை அடைதல் வேண்டும் தவறும் பட்சத்தில்  வினா 11-ல் குறிப்பிட்டப்படி அபராத தொகை வசூலிக்கப்படும்.

    18. இணைய சேவை வழங்க சந்தாதாரர்களிடமிருந்து நிறுவல் கட்டணத் தொகை  (Installation Cost) வசூலிக்கலாமா? ஆம் என்றால் எவ்வளவு?  

    ரூ.2,000/- வரை வசூல் செய்யலாம். இது தொடர்புடைய படிவம் (Customer Readiness Form) தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் வலைத்தளத்தில் உள்ளது.

    19. சில இடங்களில் பி.டி.எஸ் டிராப்கள் நகராட்சி எல்லைகளிலிருந்து அப்பாற்பட்டு உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்டசத்தில் பைபர் கேபிள் பதிப்பதில் மிகுந்த செலவினம் ஏற்படும். இதற்கு ஒரு தீர்வு என்ன?

    கேபிள் பதிக்கும் செலவில் முதல் 2 கி.மீக்கான செலவு விண்ணப்பதாரரை சார்ந்தது. 2 கி.மீ-க்கு மேல் இருப்பின் மேற்படி கேபிள் பதித்தற்கான செலவை இந்நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். உதாரணமாக விண்ணப்பதாரர்களின் தொழில்செய்யும் பகுதி 5 கி.மீ க்குள் இருப்பின், முதல் 2 கி.மீ க்கான பைபர் கேபிள் பதிக்கும் செலவை தொழில் செய்பவரும், அடுத்த 3 கி.மீக்கான செலவை தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும். மேற்படி விண்ணப்பதாரர் 5 கி.மீ க்கான பைபர் கேபிள் பதித்துவிட்டு, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மீதி 3 கி.மீ க்கான செலவீனத் தொகையை திரும்ப செலுத்தும். ஆனால் பைபர் கேபிளை பராமரிப்பது, மேற்படி விண்ணப்பதாரரின் கடமையாகும்  இதில் கேபிள் டிவி நிறுவனம் தலையிடாது.

    மேலும், விண்ணப்பிக்கும் பகுதியிலிருந்து  5 கி.மீ க்கு மேல் இருந்தால், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்து தரும்.

    20. ஒரே பகுதியில் ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது எவ்வாறு தேர்வு செய்யப்படுவர்?     

    ஒரேபகுதியில் ஒன்றிற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்திருந்தால் பகுதியின் தொழில் வாய்ப்பை பொறுத்து தேர்வுமுறை இருக்கும்.

    21. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தொழில் செய்ய அறிவுறுத்தப்படுவார்களா?

    தொழில்நுட்ப சாத்திய கூறு அடிப்படையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் சுற்றுப்புறங்களில் தொழில் செய்யலாம்.

    22. இரண்டு மாதத்திற்குள் 100 இணைப்புகள் கட்டாயம் கொடுக்க வேண்டுமா? இதற்கு விதிவிலக்கு உண்டா?

    இணைய சேவைக்கான இணைப்பு கொடுத்து இரண்டு மாதத்திற்குள் குறைந்த பட்சமாக 100 இணைப்புகள் பெற வேண்டும். தவறும் பட்சத்தில் கேள்வி -11ல் குறிப்பிட்டபடி அபராத தொகை வசூலிக்கப்படும்.

    செய்திகள்

    • 29 August
      Recruitment of Manager (Finance) on Contract Basis
      Minimum 2 Yrs of post qualification experience in Finalization of Accounts, Direct tax, Indirect tax of State/Central Public Sector undertaking or reputed Public and Private Ltd Companies or CA Firms. August 29, 2024 | Read More